Welcome to the BlogAdda Forum. Post your queries and views on various subjects surrounding the Indian blogosphere, connect with like-minded folks and have quality conversations. Spread the word amongst your fellow bloggers and let’s help each other.
A special conversation with your mom that you remember!
  • அன்னையர் தினம் என்று வைத்ததற்கு என்ன அர்த்தம்? நம் அம்மாவிடமிருந்து நாம் கற்றது என்ன? நம் குழந்தைகளுக்கு நம் அம்மாவைப் போல நாம் சிறந்த அம்மாவாக இருக்கிறோமா? இவற்றைப் பற்றிச் சிந்திக்கத்தான் இந்த நாள்.

    என்ன செய்யலாம் அன்று? அம்மா அருகில் இருந்தால் வாழ்த்து அட்டை கொடுக்கலாம் நாமே தயாரித்து; பூக்கொத்து கொடுக்கலாம்; அவளுக்குப் பிடித்ததை சமைத்து அவளுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடலாம். அவள் மடியில் தலை வைத்துப் படுத்து அவளது பழைய கதைகளைக் கேட்கலாம்.

    இவற்றையெல்லாம்விட மிக முக்கியமானது அம்மாவிடம் இருந்து நாம் என்ன கற்றோம், எதை நம் குழந்தைகளுக்குக் கற்றுத் தரப் போகிறோம் என்று சிந்திக்கலாம். அம்மாவிடம் நாம் ரொம்பவும் விரும்பும் குணம் நமக்கு வந்திருக்கிறதா என்று யோசனை செய்யலாம்.

    மற்றவர்களுக்குச் சொல்லும் முன் நான் சற்று யோசிக்கிறேன்: நான் என்ன கற்றுக் கொண்டேன் என் அம்மாவிடமிருந்து? என் அம்மா மிக நன்றாகப் பாடுவாள். பரவாயில்லை, நாங்கள் நாலு பேருமே சுமாராகப் பாடுவோம். அம்மாவின் சங்கீத ஞானம் எங்கள் குழந்தைகளுக்கும் வந்திருக்கிறது.

    குழந்தைகளாக இருந்தபோது அம்மா தான் எங்கள் உடை வடிவமைப்பாளர்; அம்மா கையால் தைத்த உடைகள் ஏராளம். தையல் கலையை மிக ஆர்வமாகச் செய்வாள். ஊஹும்....! நாங்கள் யாரும் இதை மட்டும் கற்கவே இல்லை.

    வீடு பளிச்சென்று இருக்கும். இந்த விஷயத்தில் என் அக்கா அப்படியே என் அம்மா! அம்மா நன்றாக சமைப்பாள். நான் என் அம்மாவிடம் சமையல் கற்றதே இல்லை.

    அம்மா நிறையப் படிப்பாள். எங்கள் நால்வருக்கும் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் அம்மாவிடமிருந்து வந்ததுதான். இப்போதும் புத்தகமும் கையுமாகத்தான் இருப்பாள். நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் ஈடுபாடு வந்தது அம்மாவால்தான். இப்பவும் பார்க்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு பாசுரத்தைச் சொல்லி ‘என்ன தமிழ் பாரு! அருவி மாதிரி என்ன ஒரு நடை பாரு!’ என்று தானும் வியந்து எங்களையும் வியப்பில் ஆழ்த்துவாள்.

    ஒவ்வொரு முறை அம்மாவைப் பார்க்கும்போதும் அம்மா தன் டைரியை கொடுத்துப் படிக்கச் சொல்லுவாள். தான் படித்ததில் மிகவும் கவர்ந்ததை அதில் எழுதி வைத்து இருப்பாள். அம்மாவின் டைரி அவளைப் பற்றிப் பேசாது; அவளது ரசனையைப் பேசும்.

    என் அம்மாவின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். மிகக் கோர்வையாக எழுதுவாள். அந்தக் காலத்து இன்லேண்ட் கவரில் ஒரு துளி இடம் பாக்கி விடாமல் எழுதுவாள். அம்மாவின் முத்து முத்துக் கையெழுத்து யாருக்கும் வரவில்லை. ஆனால் எனக்கு என் அம்மாவிடமிருந்து வந்த சொத்து எழுதும் திறமை தான். எத்தனை அரிய திறமை இது! நான் எழுதுவது எல்லாவற்றையும் பிரின்ட் அவுட் எடுத்து அம்மாவுக்குக் கொடுப்பேன். என் கதைகள், கட்டுரைகள் எல்லாவற்றையும் அம்மா பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாள்.

    எங்களின் ஒவ்வொரு வெற்றியும் அம்மாவால்தான். அதேபோல எங்கள் குழந்தைகளின் வெற்றிக்குப் பின்னால் நாங்கள் இருக்க வேண்டும் என்பதுதான் அம்மா எங்களுக்கு சொல்லாமல் சொல்லித் தந்த பாடம்.
    இதன்படி நடப்பதுதான் அவளுக்கு நாங்கள் செய்யும் கைம்மாறு!

    அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா!





  • It’s unfair to sum my conversations with my mum in 300 words. She's taught me so much... How to be independent, how trust people, how to be me and not follow a herd...

    Peer pressure is something (per me) which makes children/teens do things they really don't want to. I, for one have never ever succumbed to Peer Pressure. This helped me keep myself away from unwanted stress that comes from Peer Pressure.

    I remember when I was around 11-12 I went up to my mum and said "Ma, I want to have a Video game of my own because most of my classmates have their own video games".

    Mum was a little busy and said she'll talk about it later. That night when Ma was making me go to sleep, she kept her hand on my head and said, "So you want the Video Game?"

    Me: Yes, everyone has it. I so...so need it.

    Ma: But, we do rent the Video Game on weekends

    Me: But, why does everyone else has it? Please Ma, Please

    Ma: Falak, you shouldn't do something because others do it. Do something what you WANT to do. You are amazing at Dramatics, Debates, Choreography... Does anyone else in your class do so many extra-curricular activities... Leave apart excel in them.
    Me: Few... May be one or two.

    Ma: that's because all of us are different. We're different people, we have different talents and we Have to do what we WANT and we Like... Rather than doing what everyone else does. Do you want to be a part of a herd or you want to create things and do what you want to do?

    Me: Obviously what I want to do... Why should I do something others are doing.

    Ma: So do you want the Video Game

    Me: No...

    Post that I never asked for/ did something others are doing.

    That's another point that I got a Video Game on my birthday with a note... "I'm giving it because you love playing it... Not because kids your age have it... Love Ma"
  • My entry:

    All these years i never knew that together we could so much fun..
    You were always there as a mom and i loved you like that..
    But suddenly I have realized that you can be an awesome friend too..
    And am loving the new "US" ♥

    She tells me i look beautiful and I tell her "Tell me something I dont know mom"
    She tells me she did something awesome and I say "To naach!"
    She tells me you look fair today and i say "i was always fair, your eyes were dark"
    And only the two of us know how to laugh best at it..

    Mumma, With all the fun moments we've had and so many inside jokes,
    am definitely looking to the years to come.
    Happy Mother's day :)

Welcome Friend!

Be a part of the BlogAdda Forum to connect, share and learn. Login via Facebook or Register, it takes less than a minute!

Poll

No poll attached to this discussion.

In this Discussion